Erukkalampiddy

tharseen nagar

 

தர்ஸின் நகர் மீள்குடியேற்றம்

1990ஆண்டு யுத்தசூழ்நிலையில் இடம் பெயர்ந்த மக்கள் தற்பொழுது சமாதான சூழலில் மீண்டும் சொந்த ஊரில் மீள்குடியேருகின்றனர். இதில் அனேகமானவர்கள் இடம்பெயர்வின் பின் திருமணமாகி புதிய குடும்பங்களாகவுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அங்கு சொந்த காணி இல்லை இப்பிரச்சிணைக்கு தீர்வுகாணும் நோக்கில் சுமார் 100 காணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன.

இதில் மக்கள் ​ஓலைக்கொட்டில்கள் கட்டி குடியேறிவருகின்றனர். இவர்களுக்கான வசதிகளை அரசு மற்றும் பொதுமைப்புள் செய்துகொடுக்க வேண்டும்​.

 

pre school

 

நூர்தின் மஷுர் பாலர் பாடசாலை

மன்னார் எருக்கலம்பிட்டியில் புதிய முன்பள்ளி ஒன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது நூர்தின் மஷுர் பாலர் பாடசாலை என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு “தாராபுரம், புதுக்குடியிருப்பு “ போன்ற அயல் கிராமங்களில் இருந்து சிரார்கள் கல்வி கற்க வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

welfare

  • Print

 

மன்னார் எருக்கலம்பிட்டி சின்னப் பள்ளிவாயல் புனர் நிர்மானம்

மன்னார் எருக்கலம்பிட்டி welfare அமைப்பினால் விசேட கூட்டம் நடைபெற்றது. இதில் எருக்கலம்பிட்டி சின்னப் பள்ளிவாயல் புனர் நிர்மானம் பற்றி கலந்துரையாடப்பட்டது. தற்பொழுது இருக்கும் பள்ளி அகற்றப்பட்டு புதிய இரண்டு மாடிக் கட்டிடம் நிர்மானிக்கப்படவுள்ளது.

இது ஒரு வரவேற்கத்தக்க விடயமாக இருந்த போதிலும் ஒரு குறித்த சாரார் மட்டும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டது முழு ஊரினதும் ஒற்றுமையை குழைத்துவிட்டது

 

emmv

  • E-mail

 

மன்னார் எருக்கலம்பிட்டி 2012-2014 க.பொ.த.உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாளயத்தில் புதிய க.பொ.த.உயர்தர

வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் கணித,விஞ்ஞான,வர்த்தக, மற்றும்

கலை பிரிவுகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தங்குமிட வசதிகளுடன் வெளிமாவட்டத்தில் இருந்து பிரசித்தி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு மேலதிக வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன.

 

ஏற்றமிகு எம்மூர்

  • E-mail

வெண்முத்தும் செந்நெல்லும்

சுவைமிகுந்த மீனினமும்

என்றும் புகழ் சேர்க்கும்

வடபுலத்து மன்னாரில்

எழில் நிறைந்த

ஏற்றமிகு எம்மூர்

எண்திசையும் அறிந்திட்ட

எருக்கலம்பிட்டி யதன் பெயராம்


கற்றவருக்களவில்லை எம்மில்

கவின்மிகு கல்வியால்

உயர்ந்தோர்க்கும் குறைவில்லை

ஊர் போற்ற வாழுகிறோம்.

 

Main Gate

  • E-mail

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகாவித்யாலயத்தின் பொத்துவில்லு வீதியில் அமைந்துள்ள பிரதான நுழைவாயில் புதுவடிவத்தில் திருத்தி அமைக்கப்படுகிறது.

 


 

விஞ்ஞான பிரிவு

  • E-mail

க.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவு ஆரம்பம்

கடந்த 20 வருடங்களின் பின்னர் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் மீண்டும் க.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவு 18-04-2011 அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. 1990 ற்கு முன்னர் பற்பல விற்பன்னர்களை உருவாக்கிய இப்பாடசாலை மீண்டும் ஒரு அவதாரம் எடுக்கின்றது

 

Page 1 of 3

Login



Like or Dislike

Like or Dislike
 

For You

உங்களது வளமான கருத்துகளை நாம் வரவேற்கிறோம் தயவு செய்து உங்கள் கருத்து comment பகுதியில் type செய்யுங்கள்..................... எமது வளப்பற்றாக்குறை காரணமாகவே இணையத்தளம் அடிக்கடி செயல் இழக்கிறது நலன் விரும்பிகள் உதவிடலாம்.

Who's online

We have 1 guest online

Syndication

Death Announcements