புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாயத்தில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழா, பெற்றார் தினம், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வது வருட நிறைவு எம்பவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழா நேற்று சனிக்கிழமை மாலை புத்தளம் எருக்கலம்பிட்டி மு. ம. வி. திறந்த வெளி அரங்கில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் என் . எம் ஷாபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஈரான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி ஹஸ்சாணி பூர், தீப் மில்டரி அட்டச்சி, ஹொராம் லஜ்வாடி, முஸ்தபா பல்கலைக்கழக இலங்கை கிளையின் பணிப்பாளர் செய்யது ஹாமிது ரீசா ஹஜீஜி, பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக், பேராசிரியர் ஷாஹுல் ஹமீத் ஹஸ்புல்லாஹ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், முன்னால் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ், புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் தமிழ் பிரிவிற்கான பணிப்பாளர் ஜனாப் இசட்.ஏ. ஸன்ஹீர் மற்றும் பல அதிதிகளும் கலந்துகொண்டனர்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்கள், 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், தேசிய, மாகாண ரீதியான மீலாத் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாகாண உதைபந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் நினைவுச்சின்
Last Updated on Tuesday, 09 April 2013 10:46
85 சதவீதமான சிங்கள வர்த்தகர்கள் ஹலால் சான்றிதழை பெற்றுக் கொண்டுள்ளனர். ஹலாலுக்கு எதிரான குறிப்பிட்ட சிலரின் எதிர்ப்பினால் அனைத்து வர்த்தகர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஹலாலுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகவும் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முடிவிற்கு கொண்டு வர வேண்டும். எனவே ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ள முடியாது என்று அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யத் உலமா சபையின் அம்பாந்தோட்ட கிளைத் தலைவர் மௌலவி எம். அர்க்கம் கூறுகையில்,
இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் குறிப்பிட்ட சிலரினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதில் ஒன்றே ஹலால் விவகாரம். ஹலால் சான்றிதழினால் பௌத்த மக்களுக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை. தாய்லாந்து போன்ற நாடுகளில் அரச அனுசரணையுடன் ஹலால் சான்றிதழ் விநியோகிக்கப்படுகின்றது. நவீன காலத்திற்கு ஏற்ப உணவு வகைகள் பொதியிடப்பட்டு வருவதனால் அதன் சுகாதார தன்மையை கருத்தில் கொண்டே ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனை யாரும் தவறாக அர்த்தப்படுத்தக் கூடாது. அரசாங்கத்தின் பல தரப்புக்களுடனும் ஹலால் விவகாரம் குறித்து பேசியுள்ளோம். ஏற்றுமதி வியாபாரத்தில் ஈடுபடும் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு ஹலால் சான்றிதழ் இன்றியமையாததாகவே அமைந்துள்ளது. இதனை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் ஏற்றுக் கொண்டுள்ளார். சர்வதேச ஹலால் சம்மேளனத்தின் அங்கீகாரத்துடனேயே உலமா சபை மேற்படி சான்றிதழை வழங்குகின்றது.
இதைத் தவிர உலமா சபை முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவிச் செய்வதாக கூறி பிரசாரம் செய்வது முற்றிலும் தவறானது. அல்கொய்தா மற்றும் தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு உலமா சபை நிதியுதவி வழங்குவதாக கூறும் குற்றச்சாட்டு அடிப்படைத் தன்மையற்றது
thanks- kattankudi info
Last Updated on Sunday, 17 February 2013 14:42
எம்மை விட்டு பிரிந்து இரண்டு ஆண்டுகள் சென்றாலும் நீங்காத நினைவுகளாய் ...................





இளைஞர் விவகார அமைச்சு
இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபை
நாகவில்லு தொழிற் பயிற்சி நிலையம் 032-2269440
தொழிற் பயிற்சி தொடர்பான விபரம்
|
பாடநெறி |
பயிற்சி காலம் |
அணுமதி கட்டணம் |
பாடநெறி கட்டணம் (6 மாத்த்திற்கும்) |
சான்றிதழ் வகை |
நுழைவுத் தகைமை |
|
|
உள்ளக |
நிறுவனம் |
|||||
|
தையல் |
6 மாதம் |
6 மாதம் |
400/= |
2000/= |
NVQ |
தரம் - 10 |
|
தகவல் தொழில் நுட்பம் |
6 மாதம் |
6 மாதம் |
400/= |
6000/= |
NVQ |
க.பொ.த(சா/த) கணிதம்,ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தி
|
|
வீட்டு மின்னியல் |
6 மாதம் |
6 மாதம் |
400/= |
இலவசம் |
NVQ |
தரம் - 10 |
|
அலுமினியம் பொறுத்துதல் |
6 மாதம் |
6 மாதம் |
400/= |
2000/= |
NVQ |
தரம் - 10 |
· வீட்டு மின்னியல் – பாடநெறி பயிலுபவர்களுக்கு ஊக்குவிப்பாக மாதம் 600/= எமது நிறுவனத்தால் வழங்கப்படும்.
Last Updated on Thursday, 29 November 2012 12:53
1990ஆண்டு யுத்தசூழ்நிலையில் இடம் பெயர்ந்த மக்கள் தற்பொழுது சமாதான சூழலில் மீண்டும் சொந்த ஊரில் மீள்குடியேருகின்றனர்.
இலவச வீட்டு மின்னியல் பாடநெறி
இளைஞர், விவகார அமைச்சினால் நாகவில்லு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடாத்தப்படும் வீட்டு மின்னியல் பாடநெறிக்கு புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.
இப்பயிற்சி நெறியானது இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினால் வழி நடாத்தப்படுவதோடு முடிவில் தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழ் வழங்கப்படும்.
பாடநெறியில்,
என்பன பயிற்றுவிக்கப்படும்.
பயிற்சிக்காலத்தில் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகையாக மாதம் 600/= வழங்கப்படுவதுடன் பஸ் பருவகால சீட்டிற்கு (season ticket) கொடுப்பனவில் 60% எமது நிறுவனத்தால் வழங்கப்படும்.
க.பொ.த சா/த வரை கற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.
தகவல்,
நிலையப்பொறுப்பதிகாரி,
தொழிற்பயிற்சி நிலையம்,
நாகவில்லு,
பாலாவி.
071 841 3838
Last Updated on Thursday, 29 November 2012 12:48
வெண்முத்தும் செந்நெல்லும்
சுவைமிகுந்த மீனினமும்
என்றும் புகழ் சேர்க்கும்
வடபுலத்து மன்னாரில்
எழில் நிறைந்த
ஏற்றமிகு எம்மூர்
எண்திசையும் அறிந்திட்ட
எருக்கலம்பிட்டி யதன் பெயராம்
கற்றவருக்களவில்லை எம்மில்
கவின்மிகு கல்வியால்
உயர்ந்தோர்க்கும் குறைவில்லை
ஊர் போற்ற வாழுகிறோம்.
Page 1 of 3